தனது அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு என போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச் செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவருடைய அட்டையை காணாமல் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்..
அதிமுகவில் 2 பாஜக எம்.எல்.ஏக்களா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
பாஜகவின் பிரதிநிதி போல் தமிழக கவர்னர் செயல்படுகிறார் திருச்சியில் துரை வைகோ பேட்டி.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.



