தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் வருவதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முறையான நேரத்தில் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி தமிழகம் வருவார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.