தனியார் தொழிற்சாலை தொழிற்சங்க தேர்தலில் தொழில் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஏராளமான சிறு குறு மற்றும் பெரும் பெரும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் விராலிமலையில் சுமார் 40 ஆண்டு காலமாக எஸ் ஆர் எஃப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் ஒவ்வொரு வருடமும் தொழில் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த வருடத்திற்கான தேர்தல் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது இத்தொழிற்சாலையில் வழக்கம்போல் இரண்டு அணி சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் களம் காண்பார்கள் ஆனால் இந்த முறை தேர்தலில் ஒரு அணி சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் போட்டியிட உள்ளார் என்பதை அறிந்து எந்த ஒரு போட்டியும் இன்றி அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இணைந்து ஏக மனதாக போட்டியின்றி முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதற்கு முன்னர் இங்கு தொழிற்சங்க தேர்தலில் பெரும் தொழிற்சங்கவாதிகளும் வழக்கறிஞர்களும் மட்டுமே தொழிற்சங்க தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் முதன் முதலாக இந்த ஆண்டு மக்கள் பிரதிநிதியான டாக்டர் விஜயபாஸ்கர் தேர்வு செய்து இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது தொழிற்சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கருக்கு தொழிற்சங்கத்தினர் பல்வேறு தொழிற்சாலை தொழிற்சங்க பிரதிநிதிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எஸ் ஆர் எப் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் விராலிமலை எஸ்.ஆர்.எப் தொழிற்சாலைதொழிற்சங்க தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டமைக்கு முதலில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனது பணியானது முழுக்க முழுக்க தொழிலாளர்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் தொழிலாளர் பணி நிரந்தரம் தொழிலாளர் ஊதிய உயர்வு மருத்துவ காப்பீடு போன்ற தொழிலாளர்கள் நலன் சார்ந்த விஷயங்களை முக்கியத்துவம் அளித்து செயல்படுத்துவேன் என்றார்