திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு.

Filed under: தமிழகம் |

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு.

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இதற்காக கடந்த சில மாதங்களாக நேருவின் ஆதரவாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேருவின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்றும், மேலும் சிலர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜா மலையில்  திறக்கப்பட்டது.

இந்த அரசு விழாவில் பங்கேற்க வந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேருவிடம் செய்தியாளர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று கேட்டதற்க்கு பாராளுமன்ற தேதி வந்த பிறகு நானே உங்களுக்கு சொல்கிறேன்.

என்றார். பெரம்பலூர் அல்லது திருச்சி எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள் என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டதற்க்கு  அருண் நேருவோ தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு.எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட நான் தயார் என்று சூசகமாக பதில் அளித்தார்.

ஆனால் பெரம்பலூர் தொகுதியை விட அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் திருச்சி தொகுதியைத்தான் அதிகம் விரும்புவதாக சொல்லப்படுகிறது.