திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.13.49 கோடியில் மீன்,இறைச்சி மார்க்கெட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்
திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்,துணை மேயர் ஜி. திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டலக்குழு தலைவர்கள் மதிவாணன், ஜெய நிர்மலா, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள் மண்டி சேகர், பிரபாகரன், எல்.ஐ.சி.சங்கர், லீலா வேலு,பகுதி செயலாளர் ஆர்.ஜி. பாபு, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.