பரந்தூர் விமான நிலைய அறிவிப்பால், திமுகவுக்கு பின்னடைவா?

Filed under: அரசியல்,தமிழகம் |

பரந்தூர் பகுதி விவசாய பெருமக்கள் ஓராண்டுக்கும் மேலாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அது குறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் மற்றும் அதன் விளைநிலங்களையும் சேர்த்து சுமார் 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. சமீபத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது. விமான நிலைய நில அளவெடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் 137 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் திமுகவின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது திமுகவுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சீட்டு வாங்கும் கவனத்தில் இருப்பதால் இந்த கைது நடவடிக்கை கண்டு கொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக தேவையில்லாமல் இந்த பணியை செய்து வருவதாக கூட்டணி கட்சி தலைவர்களே புலம்பி வருவதாகவும் திமுகவினர்கள் கூட தேர்தலுக்கு பின் இந்த வேலையை பார்த்திருக்கலாம் என்றும் பரவலாக பேசி வருகின்றனர்.