குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

Filed under: இந்தியா,தமிழகம் |

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்று வெளியான தகவலை அடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.