விபத்தில் மூளை சாவு அடைந்ததவர். இறந்தும் வாழ்வளிக்கும் மனிதநேய கொடைவள்ளல் இறுதி யாத்திரை….
ராயல் சல்யூட் அடித்து பிரியாவிடை கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த உடல் உறுப்பு தான திட்டம் கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது.
உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.
விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.
நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும்கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.
இந்த நிலையில்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன் (வயது 80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.
வீரப்பன் உடலுக்கு
டீன் நேரு, Ms அருண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி வைத்தனர்.