பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டு வீரர் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் சந்தெர்பானி எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளது. அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அந்தத் துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹவில்தார் மதியழகன் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர், அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார்.

ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்காய் காடு கிராமத்தை சேர்ந்தவர். மதியழகன் மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ செய்தித்தொடர்பாளர் மதியழகனின் உயிர்தியாகத்தை இந்தியா நாடு என்றும் மறக்காது என கூறினார்.