“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் திடீரென சூர்யா கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் மே மாதமே தொடங்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் விஜய்க்கு சொன்ன கதையைதான் கார்த்திக் சுப்பராஜ் இப்போது சில மாற்றங்களோடு சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.