அமலாக்கத்துறை அதிரடி முடிவு!

Filed under: தமிழகம் |

அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி வழக்கு தொடர்பாக சமீபத்தில் ஐந்து மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக நீர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்னீமன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை திரட்டி இருப்பதாகவும், விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை செய்ததை அடுத்து நீர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.