புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஏற்கனவே ஊரடங்கை ஏப்ரல் 14 க்குப் பிறகு தொடர முடிவு செய்துள்ளன.
இதுமட்டுமின்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி பேசுகையில் 24 மணிநேரமும் நான் தயாராக இருக்கிறேன். மாநில முதல்வர்களும் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம், நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோளோடு தோள் கொடுத்து நிற்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை விரட்ட வேண்டும், எனக் கூறினார்.