தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.

Filed under: தமிழகம் |

தேனி மாவட்டம்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். வராக நதிக்கரையில் ஆண் பெண் இரு மருத மரத்தின் அருகில் அமையப்பெற்ற இத்திரு குமரன் திருக்கோவிலில் இன்று வைகாசி விசாக சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை 5:30 மணி அளவில் பால் அபிஷேகத்துடன் தொடங்கிய வைகாசி விசாக பெருவிழா.காலை 9 மணி அளவில் சங்க அபிஷேகம், மற்றும் 10 மணி அளவில் .ஒன்பது வகை அபிஷேகப் பொருட்கள் உடன் மகா அபிஷேகம் மற்றும் 12 மணி அளவில் உற்சாகால பூஜை தீப ஆராதனையுடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை மற்றும் தயிர் சாதத்துடன் கூடிய பிரசாதம் பக்த கோடிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் மாலை 6 மணியளவில் மண்டக படிதாரர்களின் சிறப்பு பூஜை மலர் அலங்காரங்களுடன் தீபா ஆராதனையும் பாலசுப்பிரமணிய சாமிக்கு காண்பிக்கப்பட்டு பக்த கோடிகளுக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜையில் பக்தியும் அதனுடன் கூடிய சித்தியும் கிடைக்க தமிழ் கடவுளாம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சாமியின் அனுகூலமும் மற்றும் அணுக்கிரகமும் பரிபூரணமாக கிடைக்க சிறப்பு பிரார்த்தனைகளும் அதனுடன் கூடிய யாகங்களும் சிறப்பாக நடைபெற்றது தேனி மாவட்டம் மக்கள் மற்றும் சுற்று கிராம மக்களும் திரளாது கலந்து கொண்டு பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமியின் பரிபூரண அனுக்கிரகம் பெற்று சென்றனர்.

பூஜை மற்றும் வழிபாட்டு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறையின் சார்பாகவும் மண்டக படிகாரர்களின் நேர்ச்சையோடு மிகவும் சிறப்பாக வைகாசி விசாக திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.