நகை வியாபாரி ஒருவர் தங்க நகை திட்டம் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவர் கணவரும் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் சினிமாவில் 90களில் பிரபலபமாக இருந்தவர். தமிழில் “மிஸ்டர்.ரோமியோ” உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்த ஷில்பா ஷெட்டி தொடர்ந்து படங்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். கடந்த சில காலமாக ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா தம்பதியர் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகள் முன் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து விற்ற வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகளும் உள்ளன. நகை திட்டத்தின் பேரில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் தன்னை ஏமாற்றிவிட்டதாக மும்பையை சேர்ந்த வியாபாரி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்பித்த நிலையில் ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.