நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் “அண்டாவ காணோம்”!

Filed under: சினிமா |

கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் தயராக இருக்கும் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

ஓடிடியில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் வெளியாது. இதற்கு பின்பு பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.

தற்போது தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் உள்பட பல படங்களை தயாரித்தவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவருடைய தயாரிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருந்த படம் “அண்டாவ காணோம்”. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை வேல்மதி இயக்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் இல்லாத காரணத்தால் இந்த படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நாளை ஜே.எஸ்.கே., பிரைம் மீடியா என்கிற இணையதளத்தில் வெளியாகிறது.