இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது.