கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை ரத்து – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்!

Filed under: விளையாட்டு |

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 ஆசிய கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டி20 ஆசிய கோப்பை தொடரை போட்டியை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றது. ஆனால், இந்த வாய்ப்பை இலங்கைக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆசிய கோப்பை போட்டி நடக்கும் இலங்கை அதனை பாகிஸ்தானுக்கு அளிக்கயுள்ளதகவும் தகவல் வெளியானது.

தற்போது பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்ஸ்டாகிராமில் நேற்று நேரலையில் மூலம் பேசியதில் ஆசிய கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் காரணத்தால் ஐபிஎல் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இந்த வருடம் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.