சென்னை, மே -1
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நேரத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட கூலி வேலைக்கு செல்லாமல் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கி போயிருக்கும் பொருளாதாரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பொதுமக்களின் இன்னல் துயரங்களை போக்குவதற்காக தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் சார்பில் அதன் தேசிய தலைவர் V. காமராஜ அவர்களின் முயற்சியில் சென்னை திரிசூலம் பகுதியில் வாழும் பொதுமக்களின் பசி பட்டினியை போக்குவதற்காக தனது மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து கஷ்டப்படும் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று முதல் கட்டமாக 350 ஏழை-எளிய பொதுமக்களுக்கு தேவையான நிவாரணம் உணவுப்பொருட்களை வழங்கியதுடன், தினமும் 650 குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தனர்.
தற்போது, இரண்டாவது கட்டமாக சென்னை திரிசூலம் கிழக்குப் பகுதியில் சுமார் 375 குடும்பங்களுக்கு நிவாரணம் உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள். ஏழை எளிய பொதுமக்களின் பசி பட்டினியைப் போக்க கொரோனா வைரஸ் தொற்று பயத்தை புறந்தள்ளி பொதுமக்களுக்கு நிவாரண உதவி செய்வதற்காக களத்தில் பம்பரமாக சுழன்று வரும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை மாநில பொதுச்செயலாளர் கண்ணுச்சாமி, துணைத் தலைவர் அலெக்சாண்டர், பொருளாளர் ராஜேந்திரன், ஆகியோருக்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த சைமன், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் சுப்பையா, இவர்களுடன் சினிமா இயக்குனர் மகேஸ்வரன் மற்றும் சுப்புலட்சுமி அன்னால் ஆகியோரை தென்மண்டல தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை மண்டலச் செயலாளர் அரவிந்த்ராஜா சார்பில் வாழ்த்தி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.