ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜிஎஸ்டி இழப்பு 35,000 கோடியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி வருவாய் அதிகமாக அளிக்கும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டிருந்த 9000 கோடி ரூபாயையும் அளிக்கவில்லை. இது சம்மந்தமாக தமிழக முதல்வர் பிரதமருக்குப் பலமுறை அழுத்தம் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இது சம்மந்தமாக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘மத்திய அரசு படிப்படியாக நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் கேட்ட அளவுக்கு நமக்கு நிதி வழங்கப்படவில்லை. தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் மார்ச்சில் 6 நாட்கள், ஏப்ரல், மே மாதங்களில் குறைந்துவிட்டது. இதனால் மொத்தமாக 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இதை சரிகட்ட அரசு பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.