திருச்சி, மே 30
திருச்சியில் கொரனோ வைரஸ் அச்சத்தில் மக்கள் இருக்க, எந்தவித அச்சமும் இல்லாமல், அரிசி கடத்தல் ஜெகஜோதியாக நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மவுனமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற தகவல் வர விசாரணையில் இறங்கினோம்.
திருச்சி மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் தனக்கென்று சில புரோக்கர்களை வைத்துக்கொண்டு தினம் தோறும் ரேசன் அரிசியை ரேசன் கடைகளில் நான்கு ரூபாய் கொடுத்து வாங்கி அதை திருச்சியில் உள்ள சில ரைஸ் மில்களில் நன்றாக பட்டை தீட்டி அதை வெளி மார்க்கெட்டில் 15 ரூபாய் வரை விற்கிறானாம் தென்னூர் பாபு என்பவர். அரிசி கடத்தலில் மிகப்பெரிய நெட்வொர்க்கை வைத்துள்ள இந்த தென்னூர் பாபுக்கு பல லட்சங்கள் வருமானம் வருகிறதாம். அதில் சில லகரங்களை அரசு அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை லஞ்சமாக கொடுத்து சரி கட்டி விடுத்தால் தென்னூர் பாபு மீது காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிறார்கள்.
கடைசியாக திமுக அட்சியில் கொடிகட்டி பறந்த இந்த தென்னூர் பாபு மீது நேர்மையாக நடவடிக்கை எடுத்தது சுகுமார், சாமிநாதன் என்ற இரு காவல்துறை அதிகாரிகள் தான். அதுவரை அமைதியாக இருந்த தென்னூர் பாபு கடந்த நான்கு மாதமாகத்தான் இந்த தொழிலில் மீண்டும் கொடி கட்டி பறக்கிறான் என்கிறார்கள். இந்த தென்னூர் பாபு இந்த அளவிற்கு தொழிலில் ஈடுபட காரணம் ஒரு காவல்துறை அதிகாரிகள் தான் என்கிறார்கள். அதனால் தான் என்னை தொழில் பண்ண விடலன்னா ஒரு சின்ன வியாபாரி கூட இங்கே தொழில் பண்ண முடியாது என்று காவல்துறை அதிகாரிகளையே மிரட்டும் அளவிற்கு போய் விட்டானாம்.
தென்னூர் பாபு மீது நேர்மையான அதிகாரிகள் யாராவது நடவடிக்கை எடுத்தால் மீண்டும் தடுக்கலாம் இல்லையென்றால் நெட்வொர்க் பெரிதாகி அரிசி கடத்தலில் திருச்சி மாவட்டம் முதலிடம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.