ஜூன் 9
கோவை மேற்கு மண்டல காவல் துறையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த எட்டு மாவட்டங்களுக்கும் மேற்கு மண்டல காவல்துறையில் ஐ.ஜி.யாக இருப்பவர் பெரியய்யா. இவர் பதவிக்கு வந்தபிறகு மேற்கு மண்டல காவல்துறையில் உள்ள மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்து தடுக்கப்படுகின்றன. அத்துடன், கிடப்பில் உள்ள குற்றச் சம்பவம் வழக்குகளில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணி என்கிற ராஜி பாய் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 3ம் தேதி கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டி சுடுகாட்டில் கை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அத்துடன், அவரது துண்டிக்கப்பட்ட கை பாரதியார் நகர் 4வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் முன்பு கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் கிருஷ்ணகிரி டவுன் காவல் துறையினருக்கு தெரியவர உடனே வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். அத்துடன் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தனது பிரத்தியோக புலனாய்வை தீவிரப்படுத்தி கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான வாலாஜா பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் தமிழரசன் பல பகீர் தகவலை கூறி அதிர்ச்சி அடையச் செய்தான் அதன் வாக்குமூலம் இதோ…
நான் லாரி டிரைவராக இருக்கிறேன் என் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன நான் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்தபோது எனக்கும் பாரதியார் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது நான் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் இந்த நிலையில் நான் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்தேன் இந்த நேரத்தில் எனது மனைவி கர்ப்பமானாள் இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது நான் விசாரித்தபோது அவளுடன் பாலசுப்ரமணி என்கிற ராஜி பாய் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது நான் பலமுறை கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எனது மனைவியிடம் கூறினேன் ஆனால் வேலியை தாண்டிய வெள்ளாடு போன்று அவள் கேட்கவில்லை இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது இதனால் பாலசுப்பிரமணி யனை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த 3ஆம் தேதி நான் மது குடிப்பதற்காக பாலசுப்பிரமணியணை அழைத்துச் சென்றேன். மது குடித்த இடத்தில் பாலசுப்பிரமணியன் ஃபுல் போதையில் இருந்ததால் நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது வலது கையை ஒரே போடாக போட்டு துண்டித்தேன். பின்பு அவரை கொலை செய்துவிட்டு துண்டித்த கையை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நேராக பாரதியார் நகருக்கு வந்தேன். வீட்டிலிருந்த எனது மனைவியிடம் நீ கள்ளத்தொடர்பு வைத்திருந்தவனின் கையை இதோ உனக்கு பரிசாக கொண்டு வந்திருக்கிறேன் அவனையும் தீர்த்துக்கட்டி விட்டேன் இனி நீ வேறு யாருடனும் தொடர்பு வைத்தால் இந்த கதிதான் என்று கூறிவிட்டு தலைமறைவாக இருந்தேன். இந்தநிலையில், போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான் லாரி டிரைவரான தமிழரசன். லாரி டிரைவர் தமிழரசனை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் சரியான நேரத்தில் குற்றவாளியை குறுகிய காலத்தில் விசாரணையை முடுக்கிவிட்டு குற்றவாளியை கைது செய்த போலீஸ் சூப்பிரண்டு சரவணனை கிருஷ்ணகிரி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.