தற்போது கொரோனா வைரஸ் பரவுதலில் மத்தியில், கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கும் மற்றும் இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ.மொஹம்மத் ரியாஸுக்கும் இன்று திருவனந்தபுரத்தில் எளிமையாக கல்யாணம் நடந்து முடிந்தது.
இந்த திருமணம் முதல்வரின் கிளிஃப் இல்லத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மேலும், உறவினர்களை தவிர்த்து கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜீஷ் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம் அப்துல் காதரின் மகன். ரியாஸ் மாணவராக இருந்த போதே அரசியல் வந்தார். அவர் சி.பி.ஐ.(எம்) – ன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயின் தேசிய இணைச் செயலாளராக இருந்தார். பின்பு கடந்த பிப்ரவரி 2017ஆம் DYFI- ன் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மணப்பெண் வீணா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் வேலைபார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.