ஊரடங்கு சமயத்தில் காதலியை திருமணம் செய்து கொண்ட நடிகர் கும்கி அஸ்வின்!

Filed under: சென்னை |

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி, தில்லுமுல்லு, போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து இருகிறார்.

இவர் கும்கியில் சிறப்பாக நடித்தாலும் மற்றும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவரை கும்கி அஸ்வின் என்று அழைத்து வந்தனர்.

அஸ்வினும் கே.கே.நகரை சேர்ந்த வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்துள்ளனர். வித்யா அமெரிக்காவில் எம்.எஸ் படிப்பை முடித்தவர்.இரு குடும்பத்தின் சம்மதத்தோடு இன்று அவருடைய திருமணம் எளிய முறையில் நடைபெற்று உள்ளது.

திரையுலக நண்பர்கள் எவரும் இல்லாமல் அஸ்வின் வித்யாஸ்ரீ மற்றும் இவர்களின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணத்துக்கு திரை உலக பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.