தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,095 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குணமடைந்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 56,021 பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்பு இன்று ஒரே நாளில் 3,092 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 45,371 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.