கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 204 ரயில் பெட்டிகள்!

Filed under: இந்தியா |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பாக வெளியீட்ட செய்தியில்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக ரயில் போட்டிகளை வடிவமைப்பில் மாற்றம் செய்து 204 ரயில் பெட்டிகளை நான்கு மாநிலத்துக்கு அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த 204 ரயில் போட்டிகளில் 70 பெட்டிகள் உத்திரப்பிரதேச மாநிலத்துக்கும், 54 பெட்டிகள் டெல்லி மாநிலத்துக்கும், 60 பெட்டிகள் தெலுங்கானா மாநிலத்துக்கும் மற்றும் 20 பெட்டிகள் ஆந்திரா மாநிலத்துக்கும் அனுப்பி உள்ளது என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.