பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு மூன்றாவது முறை கொரோனா பரிசோதனை நடத்தியதிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று ஒரு காய்ச்சல், அதற்கு முககவசம், ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என தெரிவித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ சென்ற ஏழாம் தேதி அவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்பு கடந்த 15ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்ததில் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிபருக்கு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்ததில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைப் பற்றி அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியது: அதிபர் நலமாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை நலமுடன் இருக்கிறது. அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
மேலும், 2வது வாரத்துக்கு அதிபர் தனிமைப்படுத்தப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.