சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் பாடல் ஒன்று இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்ப
த்தில் 3டியில் வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம் கோச்சடையான் தான். இந்தப் படத்தின் முதல் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி 4 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை
த்துள்ள இந்தப் படத்தின் பாடல் ஒன்று அக்டோபர் 7ம் திகதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி எங்கே போகுதோ வானம், அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. சோனி மியூசிக் நிறுனத்தின் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வைரமுத்துவின் வரிகளில் உருவான இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.