கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படத்துக்கு பாடிய சிம்பு!

Filed under: சினிமா |

இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ஹர்பஜன்சிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவராக நடித்துள்ளார். பின்னர் தீவிரமான ரஜினி ரசிகராக நடித்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் “சூப்பர் ஸ்டார் ஆனந்தம்” என்கிற பாடலை நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். புதிய இசைமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசை அமைத்துள்ளார்.