கொரோனா விதிகளை மதிக்காமல் தொற்றறை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது – மருத்துவர் ராமதாஸ்!

Filed under: சென்னை |

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிரதமர் மோடி தெரிவித்து வருக்கின்றனர்.

இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் விதிகளை மதிக்காமல் கொரோனா வைரஸை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதைபற்றி அவரின் செய்தி குறிப்பில்; முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்வரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 90% மக்கள் முக்கவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? விதிகளை மதிக்காமல் கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியள்ளார்.