ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பித்தா புரத்தை சேர்ந்தவர் தயா சாகர். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் தயாசகர், கிருஷ்ணவேணி ஆகியோருக்கு பித்தாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கிய திருமண பத்திரிக்கையில், தங்களுடைய திருமணத்தில் அனைவரும் கலந்துகொண்டு அன்பளிப்புகளை தவிர்த்து ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தயாசகர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட தயாசாகரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அன்பளிப்புகளை தவிர்த்து ரத்ததானம் செய்து மணமக்களை வாழ்த்தினர். இது பற்றி கூறிய மணமகன் தயா சாகர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் நான் தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறேன்.
என்னுடைய திருமணத்தை அதற்கு கிடைத்த வாய்ப்பாக கருதி திருமணத்திற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் அன்பளிப்புகளை தவிர்த்து ரத்த தானம் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன். இதன்படி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ரத்ததான முகாமில் உறவினர்கள், நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தயாசாகர் தெரிவித்துள்ளார்.