மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதிய TISA சுற்றுத் தர அமைப்பு மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் இன்று (25.08.2021) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இயக்குநர் மின் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.
கடந்த 2015 முதல் இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து அதிகம் பாதிப்புக்குள்ளான நீலாங்கரையில் முதற்கட்டமாக 15 கி.மீ மின்புதைவடம் (Cable) TISA சுற்றுத் தர அமைப்பு (சுஆரு), 70 மின் பெட்டிகள் (Pillar) அமைக்கும் பணிகள் ரூபாய் 3.5 nfho மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு இன்று மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 34,500 மின் இணைப்பு நுகர்வோர்கள் பயன் பெறுவர்.