புதுடெல்லி, செப் 24:
டெல்லியில், 2019-20ஆம் ஆண்டிற்கான தேசிய நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காணொலி மூலம், சிறந்த சேவை புரிந்தோருக்கு இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
ஆண்டுதோறும், செப்டம்பர், 24ம் தேதி, தேசிய நலப்பணித் திட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ் சிறப்பான சேவை புரிந்த பல்கலைக்கழகம்/பன்னிரண்டாம் வகுப்பு குழுக்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டிற்கான தேசிய நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் இருந்து காணொலி மூலம் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, 42 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் நிசித் பிரமாணிக் ஆகியோர் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.