தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் – பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

Filed under: தமிழகம் |

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் பதிவிட்டது; டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.C.R. சரஸ்வதி அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.S. திலீப் அவர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லாசிரியர் விருது வழங்கும் மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எல். முருகன் கூறியுள்ளார்.