கொச்சின் துறைமுகத்தில் 15 நாள் தூய்மை பணி கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பணி செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள், படகுகள் மற்றும் இழுவை படகுகள், துறைமுகத்தின் பொது பகுதிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இதன் நிறைவு நாளான நேற்று, துறைமுக பகுதிக்குள் தூய்மையை பராமரிக்க ஊழியர்கள் மற்றும், வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ள இரண்டு மாநகராட்சி வார்டு ஊழியர்களுக்கு தூய்மை படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை கொச்சி துறைமுக கழக தலைவர் டாக்டர் எம். பீனா தொடங்கி வைத்தார். சுத்தமான எரிசக்தியை பிரபலப்படுத்தும் விதமாக, வில்லிங்டன் தீவில் உள்ள கப்பல் நிறுத்தும் பகுதியில் சூரியமின்சக்தி விளக்குகள் பொருத்தப்பட்டன.