மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
Related posts:
கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் - குடியரசு துணைத்தலைவர...
அப்பாவு அறிவிப்புக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்!
திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து த...


