மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் – அதிர்ச்சியில் மதுரை!

Filed under: தமிழகம் |

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவுடியை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் மதுரையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கொலை உள்பட பல குற்றத்தை செய்து பல வழக்குகளில் தொடர்பில் இருந்தவர் முருகன். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் ஆயுதங்களுடன் மருத்துவமனைக்கு வந்து முருகனை சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பி உள்ளனர்.

மருத்துவமனையில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை கண்டதால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனைப் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதற்கு முன்பே நடைபெற்ற கொலைக்கு பழி தீர்ப்பதற்காக முருகனை கொலை நடந்துள்ளதா என்பதை பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.