மாலை மரியாதைகளுடன் நீலகிரியில் மனு தாக்கல் செய்தார் ஆ.ராசா.

Filed under: தமிழகம் |

மாலை மரியாதைகளுடன் நீலகிரியில் மனு தாக்கல் செய்தார் ஆ.ராசா.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நீலகிரி மாவட்ட கழக அலுவலக அறிவாலயத்தில் இன்று  முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் திமுக தோழமை கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கழக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி குழு செயலாளர் சுற்றுலாதுறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், ஆதி தமிழர் கட்சி தலைவர் அதியமான், நீலகிரி தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி, தொகுதி பார்வையாளர்கள் பல்லவி ராஜா, பாண்டிச்செல்வம் உட்பட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முக்கிய சாலைகள் வழியாக ஆ ராசா மக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார். முன்னதாக கட்சியினர் ஆளுயர ரோஜாப்பூ மாலைகளை அணிவித்து ஆ ராசாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.