தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத்.

Filed under: தமிழகம் |

தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத்.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

காட்ரோடை தாண்டி செல்லும்போது பரசுராமபுரம் அருகே ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சாலையில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த எம்.பி உடனடியாக தனது காரை நிறுத்தி வேகமாக இறங்கி சென்று விசாரித்தார்.

அதில் விபத்துக்குள்ளானவர் ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்த அய்யனார் என்றும் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. உடனே ப.ரவீந்திரநாத் காவல் துறைக்கும், மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ்-ல் இறந்த அய்யனாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பின்னர் ப.ரவீந்திரநாத் தனது பணியை தொடர காரில் புறப்பட்டார். ப.ரவீந்திரநாத்தின் மனிதாபிமான இச் செயலை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.