கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்த போது நடந்த சம்பவம் என நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த அவதூறுப் பேச்சு தொடர்பாக திரைத்துறையினரும் பல்வேறு தரப்பினரும் ராஜூக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஏ.வி. ராஜூ பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இந்த சூழ்நிலையில்தான் நடிகை த்ரிஷா மற்றும் தன்னைப் பற்றி அவதூறாக பேட்டி அளித்த ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் இன்று புகார் செய்துள்ளார். இந்த விவாகரம் தொடர்பாக தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் நடிகர்கள் கருணாஸ், த்ரிஷாவுக்கு ஆதரவாக ராஜூக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.