தளபதி விஜய்யை பாராட்டிய தல அஜித்துக்கு நெருக்கமான ரேஸ்சர்!

Filed under: சினிமா |

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா. இவர் நடிகர் அஜித்துக்கு மிக நெருக்கமான நண்பர். இது மட்டுமில்லாமல் அலி ஷாவின் தந்தையுடன் அஜித் மோட்டார் சைக்கிள் ரேஸ்சில கலந்து கொண்டுள்ளார். இதனால் அலிஷா அஜித்தை பற்றி அடிக்கடி பெருமையாக பேசி வருவார்.

தற்போது அலிஷா விஜயைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று தளபதி விஜய் நடித்துள்ள கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதை நடிகர் சாந்தனு கில்லி படத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதைப்பார்த்த அலிஷா, விஜய்; என்ன ஒரு ஹீரோ.. என்ன ஒரு ஸ்டைல்.. என பதிவிட்டு ட்விட்டரில் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் அஜீத்துக்கு நெருக்கமான அலிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.