அப்பாவாக போகும் நடிகர் நகுல் – குவியும் வாழ்த்துக்கள்!

Filed under: சினிமா |

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இந்த படத்தில் ஐந்து பேரில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். இதன்பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் காதலில் விழுந்தேன் படத்தில் நாக்க மூக்க பாடலில் ஆடிய நடனம் மிகப்பெரிய மிகப்பெரிய வைரலாகி ஆகியது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும். அவரும் அவருடைய மனைவியும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், டிவி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வந்தார். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் எந்த படப்பிடிப்பிலும் நடக்கவில்லை என்பதால் அவர் அவருடைய குடும்பத்தோடு கழித்து வருகிறார்.

தற்போது அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். அந்த சமயத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது எனவும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், அனைவரின் ஆசீர்வாதமும் மற்றும் வாழ்த்துக்களும் வேண்டுமென பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நகுல் நடிகை தேவையணியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.