எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை – பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!

Filed under: சினிமா |

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சுஷாந்த் பொறியியல் படிப்பை முடித்தவர். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

இவருடைய முன்னாள் மேலாளர் திஷா ஷேலியன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சமீபத்தில் இருந்து இவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தற்போது மும்பையில் இருக்கும் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் விசாரணையில் கூறப்படுகிறது.

இவருடைய மரணத்திற்கு பிரதமர் மோடி, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.