மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம்!

Filed under: இந்தியா |

பாகிஸ்தான் நாட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்திற்கு சென்றுதுள்ளது. அங்கு இருக்கு பயிர்களை அழித்து வருகிறது. பின்னர் பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களான பிகானீர், ஜலோர், பார்மர், ஜெய்சல்மர் போன்ற மாவட்டங்களுக்கு கூட்டம் செல்லாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலைவன வெற்றிகளை அழிப்பதற்கு உலக வங்கி நிதியுடன் 411 டிராக்டர்களில் மருந்துகளை ஸ்ப்ரேயர் கொண்டு தெளிக்கவும் மற்றும் 53 ஆயிரம் லிட்டர் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.