சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

Filed under: இந்தியா |

சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது;

மகாத்மா காந்தி நமது நாட்டின் சுதந்திர இயக்கத்தின் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்தார் என்பது நம்முடைய அதிர்ஷ்டம். ஒரு அரசியல் தலைவராகவும், ஒரு துறவியாகவும் அவர் இந்தியாவில் மட்டும் இப்பிடிப்பட்ட நிகழ்வை எற்படுத்தினர் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பேசினார்.

மேலும், கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுக்கு நம்முடைய தேசம் கடமைப்பட்டுள்ளது எனவும் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்காக முழு நாடும் தலை வணங்குகிறது எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.