இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.!

Filed under: விளையாட்டு |

விளையாட்டு துறையில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கப்படும்.

இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஆல்-ரவுண்டராக விளையாடுகிறார்கள்.

இதன் மூலம் பிசிசிஐ இவர்கள் இருவர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.