
வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடன் சேர்ந்த தொழிலதிபர் […]
Continue reading …
ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
Continue reading …
கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது. இந்தியாவில் நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தில்லி, ராஜஸ்தான், மராட்டியம் […]
Continue reading …
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்புப் பணியில் அடுத்த கட்டமாக 3.1.2022 அன்று 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை […]
Continue reading …
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்ததோடு, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த நிகழ்வுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முக்கிய பங்காற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02.05.2016 -ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில், அரசமைப்புச் […]
Continue reading …
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. […]
Continue reading …
தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது: ‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே. இந்த வேகத்தை நாம் தொடர்வோம். கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் […]
Continue reading …
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கும் பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இது குறித்து பிரதமர் வெளியிட்ட தொடர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது : கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் ஆலோசித்தேன். காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் களத்தில் உள்ள அதிகாரிகள் உதவி வருகின்றனர். அனைவரின் […]
Continue reading …
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை […]
Continue reading …
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத அரசாணையை வெளியிட்டதால் அதன் பயனை உணர்ந்த ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் திராவிட முன்னேற்றக் கழகக் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை முதல்வரிடம் கூறி, என்றும் வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் கோரிக்கை வைத்தனர். மேலும் […]
Continue reading …