சென்னை, ஏப்ரல் 26 தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளைபொருட்களைபாதுகாத்துசேமித்திட கிடங்குவசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு […]
Continue reading …நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி ஐந்து மாற்றுத் திறனாளி குடும்ப நபர்களுடன் வசித்து வரும் திருமணஞ்சேரி கோவிலின் ஊழியருக்கு, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, நிவாரண உதவிகளை செய்துள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி என்ற கிராமத்தில், புகழ்பெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோவிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பணிபுரியும் முரளி என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரும் மாற்றுத் திறனாளிகள். கொரோனா வைரஸ் காரணமாக […]
Continue reading …நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி நாகப்பட்டினத்தில் டி.எஸ்.பி.அலுவலகத்தின் பக்கத்தில் காவல்கள் அங்காடி உள்ளது. அதன் அருகில் காவலர்கள் குடியிருப்புகள் இருப்பதால் காவலர்கள் பணியில் இருக்கும் போது குடும்பத்தினர் அங்காடியில் மளிகை பொருள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இதில் சிறை காவலர்கள், வன விலங்குதுறை, தீயணைப்பு துறை, காவல் துறை போன்றவர்கள் பயன் பெற்று வந்தனர். ஆயுதப்படையின் டி.எஸ்.பி யின் மேற்பார்வையில் இயங்கி வந்த அங்காடி, கடந்த ஒரு மாத காலமாக […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 24 பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23/04/2020) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 24 கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆவின் பாலகங்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் […]
Continue reading …நாகை ஏப்ரல் 24 பி.மூர்த்தி (எ) சிற்பி நாகை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவப்பிரகாசம் என்பவர், லஞ்சம் பெற்ற புகார் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். ஜெயங்கொண்டாம் ஊரை சேர்ந்த இவர், கஞ்சா, சாராயம் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இவர், இங்கு காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய நாள் முதல், புகார் அளிப்பவர்களிடம் இருந்து, லஞ்சம் பெறாமல் நடவடிக்கை […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 24 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் […]
Continue reading …மதுரை, ஏப்ரல் 22 மதுரையில், 65 வயதான பெண் ஒருவர், உணவுக்காக வைத்திருந்த பணத்தை, பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 22 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடகத் துறை பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர், நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்குச் […]
Continue reading …