கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்ட நர்சரிகள் அனைத்தும் நாளை (ஜூன் 5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வருகின்றன. இந்த நர்சரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக் கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நர்சரிகள் மார்ச் […]
Continue reading …கோவை, ஜூன் 3 கோவை மாநகர காவல்துறையில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ஸ்வப்னா சுஜா, இந்த காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில் பதினோரு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை போலீசார் மீட்டனர். இதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணி ஸ்வப்னா சுஜாவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டதற்கு […]
Continue reading …சென்னை, ஜூன் 3 சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அலுவலகப் பணியில் ஈடுபடும் உதவியாளர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உதவியாளருடன் வேலை செய்துவந்த சக பணியாளர்கள் 77 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த புதன்கிழமை கண்காணிப்பாளர், புள்ளியியல் வல்லுநர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் […]
Continue reading …கோவை, ஜூன் 1 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று தமிழக அரசு பொதுமக்களிடம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், ஆகியவற்றில் கூட்டு வழிபாடு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தாலும் தமிழக அரசின் உத்தரவுகளை […]
Continue reading …கோவை, மே 27 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும், மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவரும், கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் தீவிரமான ஆதரவாளருமான ஹரிஹரசுதன் தலைமையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி […]
Continue reading …சென்னை, மே 24 தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிந்து வந்த நான்கு இணை ஆணையர்கள் நேற்று 23/ 5 /2020vஅதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றம் உத்தரவால் அறநிலையத்துறையில் பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக கடந்த 6 வருடங்களாக கோலோச்சிக் கொண்டு வானளாவிய அதிகாரத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்த நடராஜனை அதிரடியாக சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதைப்போல சென்னை, […]
Continue reading …கோவை,மே 22 தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால், வருகிற மே 26 ஆம் தேதி அன்று அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கோவில்களை திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26ம் தேதி […]
Continue reading …கோவை, மே 19 கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக – கேரள எல்லையில் ஆனைக்கட்டி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் காட்டுயானைகள், கரடி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சேம்புகரை, தூமனூர், கொண்டனூர், ஆலமரம்மேடு, ஜம்புகண்டி, காட்டுச்சாலை, சுண்டிவழி, வடக்கலூர், பண பள்ளி, மாங்கரை, போன்ற பத்துக்கு மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆதிவாசி மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர், இப்பகுதியில் 1200 குடும்பங்களைச் சேர்ந்த […]
Continue reading …கோவை மே 15வே மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, அத்துடன் ஊரடங்கு உத்தரவு இருந்த காரணத்தினால் கோவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி போய் இருந்தனர். அத்துடன் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் அரசம்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் […]
Continue reading …கோவை, மே 12 வே மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று பேரிடராக தொடங்கியதிலிருந்து தி.மு. கழகம் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் அவசர கோரிக்கைகளை சேகரித்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இம் முயற்சியின் மூலம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகளை எங்களிடம் எழுப்பி உள்ளனர். அதில், பல அத்தியாவசிய தேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கோரிக்கைகளையும் […]
Continue reading …