விரைவில் நடைபெற உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நிலையில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரம் எடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயரை நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்தார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடியில் இரண்டு பக்கம் யானைகள், நடுவே வெற்றியைக் குறிக்கும் வாகை பூ, மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட அந்த கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். […]
ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம். இப்பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் […]
Continue reading …தமிழ்நாடு அரசு வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 2025 பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து செயல்படுத்திடவும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு 2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் […]
Continue reading …விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். கோபியிடம் படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய-ள்ளார் விமல். ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீதுவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் […]
Continue reading …வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமூக ஆர்வலர் இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். “கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்க […]
Continue reading …ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்னை தகுதி நீக்கம் செய்ய யுபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை என டில்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் சான்றிதழ் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்துள்ளார். பூஜா கேத்கர் போலி ஓபிசி சான்றிதழ், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், பெயர் மாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு […]
Continue reading …நாளை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் எழுதிய மாணவர்கள் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் ஆகியோர்களின் மறுமதிப்பீட்டு பட்டியல் வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம், “நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12) / மேல்நிலை முதலாம் ஆண்டு (11) / 10ம் வகுப்பு […]
Continue reading …இமாச்சலப் பிரதேச அரசு ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய சராசரி திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக உள்ளார். கடந்த 2023 டிசம்பரில், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிப்பு குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சமீபத்தில் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தது. இமாச்சல் மாநில சட்டசபையில் பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்தும் […]
Continue reading …ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி நாளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. உணவு வழங்கல் துறை ஆகஸ்ட் 31ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அன்றைய தினம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க […]
Continue reading …