அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையில் நவம்பர் 30ம் தேதி ஆஜராக வேண்டுமென அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. 5 மணி நேர […]
Continue reading …நாளை முதல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என 13 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை […]
Continue reading …16ம் நூற்றாண்டில் பராந்தக சோழன் புதல்வன் ஆதித்யராஜ சோழன் என்பவரால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் போர் புரியும் படைவீரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீரநாராயண பெருமாள் ஏரி. இது காலப்போக்கில் பெயர் மருவி வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும் 25 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏரி தற்போது வரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு […]
Continue reading …“விக்ரம்” திரைப்படம் வெற்றிப் பெற்றதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து “கல்கி 2898” திரைப்படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். அத்திரைப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7ம் […]
Continue reading …கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் ஜனவரி முதல் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் மூலம் டிக்கெட் வாங்கும் முறை வரும் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் பெற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் க்யூ ஆர் கோடுகள் மூலமாகவும் பேருந்தில் டிக்கெட் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில போக்குவரத்துத்துறை இது குறித்து, “டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி […]
Continue reading …சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை […]
Continue reading …கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக ஷாருக் கானுக்கு அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாபாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் ஷாருக் கான் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவரது நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]
Continue reading …இன்று ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி அதாவது இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசத்தை நீட்டி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 3ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகிவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …கடந்த 2019ம் ஆண்டு நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா” படத்தின் மூலம் ஹீரோவானார். அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து “மகான்” படத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. எனவே அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும், இப்படத்திற்கு துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் […]
Continue reading …